[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
 • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
 • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
 • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
 • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
 • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
 • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
 • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
தமிழ்நாடு 13 Oct, 2017 04:36 PM

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 256 கோடி ரூபாய் நிதி: தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை

tamilnadu-govt-request-fund-for-dengue

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த 256 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ள டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ், குழந்தைகள் நல மருத்துவர் சுவாதி துப்லிஸ், கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கர்க் ஆகியோர் கொண்ட மத்திய குழு தமிழகம் வந்தது. 
இதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவ இயக்கக வளாகத்தில் மத்திய குழுவினர் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் பங்குபெற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தொற்று நோய் தடுப்பு இயக்குநர் குழந்தைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். டெங்கு பாதிப்பு நிலவரம், அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வுக் குழுவினர் கேட்டறிந்தனர். 
கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சுகாதாரத்துறையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கவும், உபகரணங்கள் வாங்கவும் 256 கோடி ரூபாய் நிதிகேட்டு, மத்திய குழுவினரிடம் அறிக்கை அளித்திருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் பரிசோதனை முறைகளை மத்திய அரசு கேட்டறிந்ததாக கூறிய அமைச்சர் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு பாராட்டியதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய ஆய்வுக்குழுவைச் சேர்ந்த மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறுகையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்யும் எனத் தெரிவித்தார். மேலும் டெங்குவை தடுப்பது அரசின் கையில் இல்லை என்றும் மக்கள் கைகளில்தான் உள்ளது என்றும் அவர் கூறினார். எல்லோர் மத்தியிலும் டெங்கு குறித்த விழிப்புணர்வு தேவை. மக்கள் தங்கள் சுற்றப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம். அப்படி சரிவர பராமரிக்காததால்தான் டெங்கு பரவுகிறது என்று அசுதோஷ் பிஸ்வாஸ் விளக்கமளித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close