[X] Close
JUST IN
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
 • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
 • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
தமிழ்நாடு 12 Oct, 2017 01:45 PM

ஆபத்து நிறைந்த சீனப் பட்டாசுகள்: போலி பட்டாசுகள் ஜாக்கிரதை!

beware-of-dangerous-china-crackers

தீபாவளி என்றாலே சட்டென நினைவுக்கு வருவது பட்டாசுதான். அப்படி இருக்க, தரமற்ற போலி பட்டாசுகள் மற்றும் சீனப் பட்டாசுகள் குறித்து மக்கள் விழிப்போடு இருப்பது அவசியம்.

தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்களுக்கு இணையான இடத்தில் இருப்பவை பட்டாசுகள் ஆண்டுதோறும் தீபாவளியின் போது, ஒளியாலும், ஒலியாலும் இல்லந்தோறும் மகிழ்ச்சியை உண்டாக்கும் பட்டாசுகள் பண்டிகையின் ‌பிரிக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது. இதனை பயன்படுத்தி சீனப் பட்டாசுகள் மற்றும் தரமற்ற போலி பட்டாசுகள் கலந்துவிடும் அச்சுறுத்தல் நீடிக்கிறது.

சீனப்பட்டாசுகள் மிகவும் ஆபத்தானவை என்று தெரிந்த‌ருந்தும், அவற்றை வருமானத்திற்காக சில பட்டாசு வியாபாரிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குற்றம்சாட்டுகிறார்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள். கடந்த ஆண்டுகளில் சீனப் பட்டாசுகளின் ஆதிக்கம் அதிகம் இருந்ததாகவும், அது படிப்படியாகக் குறைக்கப்பட்டு தற்போது சீனப்பட்டாசுகள் விற்பனை பெருமளவு குறைந்து விட்டதாகவும் வியாபாரிகள் கூறுகிறார்கள். எனினும் சீனப் பட்டாசுகள் விற்பனை குறித்து சோதனை மேற்கொள்ளவும், அரசு இடும் உத்தரவை பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் தீயணைப்புத்துறை தெரிவிக்கிறது.

சீனப் பட்டாசுகள் தற்போது புழக்கத்தில் இல்லை என்று சொல்லப்பட்டாலும், மக்களுக்கும், பட்டாசு வியாபாரிகளுக்கும் அதன் தீங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு, அவற்றை புறக்கணிக்க முன்வந்தால்தான் தரக்குறைவான போலி பட்டாசுகள் மற்றும் ஆபத்து நிறைந்த சீனப்பட்டாசுகளின் ஒழிப்பென்பதும் சாத்தியமாகும்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close