[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
தமிழ்நாடு 12 Oct, 2017 07:20 AM

தமிழகம் முழுவதும் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

rain-in-tamilnadu

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மழை பெய்து வெப்பத்தை தணித்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மர்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. திருத்தங்கல், வெம்பக்கோட்டை, மீனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மற்றும் காற்றுடன் தொடர்ந்து ஒரு மனி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த்து. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், செல்லம்பட்டி, சேடபட்டி , எம்.கல்லுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாலை 6 மணியிலிருந்து இரவு சுமார் 9 மணி வரை கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்களம், சோத்துபாறை அணை, கும்பக்கரை உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் பிற்பகல் 4 மணி முதல் பலத்த இடி மின்னலுடன் கூடிய பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. 
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கடுமையான வெய்யிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தநிலையில் அவிநாசி, சூளை, ஆட்டையம்பாளையம், கைகாட்டிப்புதூர், பழங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கன மழை பெய்தது. 
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பெய்த கனமழையால், நீதிமன்ற சுற்றுச்சுவ இடிந்து விழுந்தது. அங்குள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியிருப்பதாக் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருப்பதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close