[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

அழிவின் விளிம்பில் ஆங்கிலேயர் காலத்து கமுதி கோட்டை

ramnad-kamuthi-fort-is-getting-spoiled

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டில் 17-ம் நூற்றாண்டு கட்டப்பட்ட கோட்டையை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோட்டை பராமரிப்பு இன்றி அழிந்து வருவதாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். தொல்லியல் துறையினர் பராமரிப்பு செய்து சுற்றுலாத் தலமாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக்கோட்டை பராமரிப்பு இன்றி அழிந்து வருவதாகவும் மேலும் சமூக விரோத செயலுக்கு பயன்படுவதாகவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இதனை தொல்லியல் துறையினர் பராமரிப்பு செய்து சுற்றுலா தலமாக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

கமுதி கோட்டை 17-ம் நூற்றாண்டில் அப்போது ராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர் உடையத்தேவர் என்பவரால் பிரான்ஸ் நாட்டு பொறியாளர் உதவியுடன் இக்கோட்டையை கட்டியதாகவும் பின்னர் பாஞ்சாலங்குறிச்சி போர் வீழ்ச்சிக்கு பின் இக்கோட்டை ஆங்கிலேயர்கள் கைவசமாகி அதற்குமுன் இக்கோட்டையில் ஆயுத கிடங்குகள் அமைத்து போர் வீரர்களுக்கு ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்ததாகவும், ஊமைத்துறை இங்கு தங்கி ஆங்கிலேயர்களுடன் போரிட்டு சண்டையிட்டதாகவும், மருது சகோதரர்கள் இங்கு சில காலம் தங்கி விட்டு சென்றதாவும், ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆங்கிலேயர் வரி கேட்பு கூட்டத்திற்கு பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து ராமநாதபுரம் செல்லும்போது வீரபாண்டிய கட்டபொம்மன் இங்கு தங்கி சென்றதாவும், இங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூமிக்கு அடியில் குகைவழி பாதை இருந்ததாகவும் வரலாற்று ஆதராரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு இதுபோன்ற ஒன்பது சுற்று கோட்டைகள் இருந்ததாகவும் அது கடந்த 1877-ம் ஆண்டில் குன்டாறு காட்டாற்று வெள்ளத்தில் இக்கோட்டைகள் தண்ணீரில் அடித்து இழுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது ஒரு கோட்டை மட்டும் இங்குள்ளது. பின்னர் இக்கோட்டையை கடந்த 1966-ம் ஆண்டு தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டு தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இக்கோட்டையை பராமரிப்பு செய்யாததால் சுவர்கள் மற்றும் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. கோட்டைக்குள் வரும் நபர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் இக்கோட்டை தற்போது மது குடிக்கும் பாராக மாறியுள்ளது. அதனால் இக்கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளதாக புகார் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், இதனை பராமரித்து சுற்றுலா தலமாக்க அரசு முன்வர வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். நாம் இது குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close