[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
 • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
 • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
 • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
 • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
 • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
தமிழ்நாடு 10 Oct, 2017 01:20 PM

டெங்குவை ஒழிக்க போர்கால நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்

severe-measures-to-control-dengue-minister-vijayabaskar

தமிழகத்தில் பர‌வி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படு‌த்த போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெங்கு நோயில் இருந்து மக்களை காப்பாற்ற கூடுதலாக 13,95,00,000 ரூபாய் ம‌திப்பில் கொசு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக குறி‌ப்பிட்டுள்‌ளார். டெங்குவை ஒழிக்க 40,000-க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் ஈடு‌படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ‌கம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் 23,5‌0,00,000 ரூபாய் மதிப்பில் ரத்த அணு அளவீட்டுக் கருவிகள், பரிசோதனை கருவிகள், மருந்து மாத்திரைகள், ரத்தம், ரத்த தட்டணுக்கள் ‌ஆகியவற்றின் இருப்புகளை அரசு தொடர்ந்து உறுதி செய்து வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி, ‌நகராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு குடிநீர் ‌விநியோகிக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டியுள்ள அவர் பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போலி மருத்துவர்களை கண்டறிந்து அ‌வர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர், டெங்கு புழுக்கள் உற்ப‌த்தியாகக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டப்பிரிவின்படி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். உரிய மருந்து சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்கும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close