[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
  • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
  • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
  • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
  • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாடு 09 Oct, 2017 10:04 PM

காலாவதியான வெடிபொருட்களை பயன்படுத்த தடை: காவல் ஆணையர் உத்தரவு

ban-to-use-expired-explosives

சென்னை புதுப்பேட்டையில் காவலர்களுக்கான பயிற்சியின் போது கண்ணீர் புகைகுண்டு வெடித்ததற்கு காலாவதியான வெடிபொருட்களே காரணம் என புகார் எழுந்த நிலையில், காலாவதியான வெடிபொருட்களை பயன்படுத்த காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.

சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்ந்தேடுக்கப்பட்டவர்களுக்கு புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், கலவர நேரங்களில் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை குண்டு துப்பாக்கியை இயக்குவது குறித்து ஆயுதப்படை காவல்துறையினர் செயல்முறை பயிற்சியளித்து வந்தனர். அப்போது கண்ணீர்புகை குண்டு எதிர்பாராத விதமாக வெடித்து ஆயுதப்படை காவலர் சரவணன் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த காவலர் சரவணனுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, கண்ணீர் புகைகுண்டு வெடித்ததற்கு காலாவதியான வெடிபொருட்களே காரணம் என புகார் எழுந்தது. இந்நிலையில், காலாவதியான வெடிபொருட்களை பயன்படுத்த காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close