[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
  • BREAKING-NEWS போர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்
  • BREAKING-NEWS காங்கிரஸ்-திமுக இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை - குஷ்பு
  • BREAKING-NEWS மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வான சீத்தாராம் யெச்சூரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

ரேசன் கடைகளில் விதிமீறி தனியார் பொருட்கள் விற்பனை

private-products-sale-in-ration-shop

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக ரேசன் கடைக்கு வரும் பொதுமக்களிடம் தனியார் நிறுவன பொருட்களை ஊழியர்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

மளிகை கடை‌ளில் ஒரு கிலோ ரவை 36 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், ரேசன் கடைக்கு வரும் பொதுமக்களிடம் அரை கிலோ ரவை 30 ரூபாய்க்கும், பொரிகடலை ஒரு கிலோ 96 ரூபாய்க்கும் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதிக விலைக்கு விற்கப்படும் இந்த பொருட்களை வாங்கினால் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகிக்க முடியும் என்றும் ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close