[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
  • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
  • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
  • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
தமிழ்நாடு 08 Oct, 2017 12:31 PM

விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு

doctors-not-in-govt-hospital-farmer-death

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் விவசாய தொழிலாளி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மயிலாப்பூரை சேர்ந்த கோபால் என்பவர் மூளையில் ரத்த கசிவு காரணமாக நேற்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், உடல் நிலை தேறிவிட்டதாக கூறி நள்ளிரவில் பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்நிலையில் கோபால் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் இருந்தவரை அவசரகதியாக பொது வார்டுக்கு மாற்றியதே உயிரிழப்புக்கு காரணம் என கோபாலின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட முற்பட்ட போது பெரும்பாலான மருத்துவர்கள், மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு சென்‌றது தெரியவந்ததாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கோபாலின் உடலை மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பணியில் இருந்த மருத்துவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close