[X] Close
JUST IN
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு

தீயை தாக்குபிடிக்கும் மேலாடை: சென்னை இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு

chennai-youth-new-innovation

மழை, குளிரில் இருந்து மக்களை பாதுகாக்க பிரத்யேக ஆடைகள் உள்ளன. அதேபோல், கடுமையான தீ ஜூவாலைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் மேலாடை ஒன்றை சென்னையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

தீ காயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர் படும் சிரமத்தை பார்த்தே‌ "ஹீட் அண்ட் ஃபையர் ரெசிஸ்டன்ஸ்" மேலாடையை உருவாக்கும் எண்ணம் தமக்கு தோன்றியதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த பாஸ்கரன். சோடியத்தை மூலப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடை, 500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தையும், தண்ணீரில் நனைத்து பயன்படுத்தும் போது 1,500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தையும் தாங்கும் என பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

வெப்பத்தை தாங்கும் இந்த உடையானது, தீயணைப்பு, காவல்துறை மற்றும் தொழிற்சாலைகளில் அதிக வெப்பமான இடத்தில் பணியாற்றுபவர்கள் அணிவதற்கு ஏதுவானது என்று கூறப்படுகிறது. வெவ்வேறு வடிவங்களில், குறைந்த விலையில் இந்த மேலாடையை தயாரித்து மக்கள் பயன்பெறும் வகையில் விற்க முடியும் என்றும் பாஸ்கரன் தெரிவிக்கிறார். பாஸ்கரனின் இந்த கண்டுபிடிப்பை தீயணைப்புத்துறை அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close