[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்

7ஆவது முறையாக அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

bridge-damage-7th-time-in-krishnagiri-between-villages

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் 7 ஆவது முறையால் தரைப்பாலம் சேதமடைந்ததால் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டியில் காட்டாற்று வெள்ளத்தால் 7ஆவது முறையாக தற்காலிக தரைப்பா‌லம் சேதமடைந்தது. அதனால், அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையிலுள்ள தொட்டல்லா ஆற்றிலிருந்த தற்காலிக தரைமட்ட பாலம் அடித்து செல்லப்பட்டது. அதனால், 2ஆவது நாளாக இன்றும் 20க்கும் அதிகமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக உயர்மட்ட பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close