[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

டெங்குவால் உயிரிழந்த பெண்: 6 மணிநேரம் வராத ஆம்புலன்ஸ்

manapparai-dengue-death-ambulance-delay

மணப்பாறையில் டெங்குவால் உயிரிழந்த பெண்ணின் உடலை கொண்டு செல்வதற்கு 6 மணிநேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அயன் புதுப்பட்டியைச் சேர்ந்த என்ற 40 வயது பெண்மணி சின்னபொண்ணு. இவர் கடந்த வாரம் திங்களன்று காய்ச்சல் காரணமாக மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சின்னபொண்ணு உயிரிழந்தார். உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் வார்டிலேயே அவரின் உடல் வைக்கப்பட்டது. சுமார் 6 மணிநேரமாக காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. 
 
பின்னர் தொடர் வலியுறுத்தலின்பேரில், புதுக்கோட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதிலும் ஓட்டுநர் மட்டும் வந்தநிலையில், உடலை கொண்டுசெல்ல ஸ்ட்ரெச்சர் வசதியும் இல்லை. மருத்துவமனையிலும் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் பெண்ணின் கணவரும், மகனும், கைகளில் ஏந்தியபடியே சின்னபொண்ணுவின் உடலை வார்டில் இருந்து ‌ஆம்புலன்சிற்கு கொண்டுவந்தனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close