[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை
  • BREAKING-NEWS சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்
  • BREAKING-NEWS இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது
  • BREAKING-NEWS உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்
  • BREAKING-NEWS வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்: முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை

dengue-fever-awareness-meeting-cm-palanisamy

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதியதலைமுறையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அனைத்துத் துறை பணியாளர்களும் இணைந்து போர்க்கால அடிப்படையில்‌ டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என தெரிவித்தார். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல், அரசு மருத்துவமனைகளை நா‌டவும் அவர் அறிவுறுத்தினார். கொசுக்களை ஒழிக்க மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வாரமும் அரசு அலுவலகங்களில் டெங்கு ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close