[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: மாணவனிடம் விசாரணை

kidnapped-child-rescued-in-chennai

சென்னையில் கடத்தப்பட்ட மூன்று வயது ஆண் குழந்தையை காவல்துறையினர் அடுத்த 24 மணி நேரத்தில் மீட்டனர்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ். இவரது மகன் முகமது சாது கடந்த 25ஆம் தேதி மதியம் தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மாயமானான். இதையடுத்து அதிர்ச்சியடைந்த முகமது சாதுவின் பெற்றோர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்தப் பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறையினர் துப்பு துலக்கியதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், குழந்தையை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவனிடமிருந்து குழந்தை முகமது சாதுவை காவல்துறையினர் மீட்டனர்.

குழந்தை மீட்கப்பட்டது குறித்து கூறும் காவல்துறையினர், கடத்தலில் தொடர்புடைய சிறுவனுக்கு 14 வயதே ஆவதால், அவன் எதற்காக இச்சம்பவத்தில் ஈடுபட்டான் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறினர். மேலும், கடத்தலில் ஈடுபடுவோர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். குழந்தை கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து அந்த குழந்தையை மீட்டுக்கொடுத்ததற்காக காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close