[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி பணியிடை நீக்கம்

madurai-granite-scam-judge-mahendra-bhupathi-suspended

மேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நீதிபதி மகேந்திர பூபதி, கிரானைட் வழக்கில் பி.ஆர்.பி.மற்றும் அவரது சாகக்களை விடுத்தார்.

மேலும் அப்போதைய மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அவர் கிரானைட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர். இந்த விவகாரம் சமூக வளைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட நீதிபதி உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தினார். நேற்று மேலூர் நீதிமன்றத்தில் ஆய்வு செய்த நீதிபதிகள், மகேந்திர பூபதியின் முந்தைய தீர்ப்புகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தினர். அவரிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நீதிபதி மகேந்திர பூபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மேலூர் நீதிபதியாக பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close