[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் சிறை: நீதிமன்றம் கருத்து

drive-without-license-will-go-to-jail-chennai-high-court

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது.  அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எப்படி முக்கியமோ, அதேபோல வாகனம் ஓட்டுவதற்கு அசல் ஓட்டுநர் உரிமம் முக்கியம் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தெரிவித்தது. ஓட்டுநர் உரிமத்தை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வருபவர்களுக்கும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. அசல் ஓட்டுநர் உரிமத்தை மறந்து வைத்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை தவறாகக் கருத முடியாது என  தெரிவித்த நீதிமன்றம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கலாம் என தெரிவித்தது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close