[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

சென்னையை எம்டன் தாக்கிய நாள் இன்று

remembering-a-german-ship-that-rocked-madras

சென்னையில் எம்டன் கப்பல் குண்டுமழை பொழிந்த தினம் இன்று. 103 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழர்களின் பேச்சு வழக்கில் ஒன்றாக கலந்துவிட்ட முக்கிய வார்த்தைகளுள் எம்டனும் ஒன்று.

எதிர்பாராத நேரத்தில் ஆபத்தை ஏற்படுத்துபவன் எம்டன் என்ற சொல்லாடல் தமிழகத்தில் கடந்த நூறாண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. அதேவேளையில் துடுக்கத்தனமான, தைரியமானவர்களையும் எம்டன் என்று சொல்வதுண்டு. இதற்கு காரணம் ஜெர்மனியின் எஸ்.எம்.எஸ் எம்டன் என்ற அதிநவீன போர்க்கப்பல் சென்னையில் நடத்திய தாக்குதல் தான்.

முதலாம் உலகப்போரின் போது ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்துக்கு எதிராக தீவிரமாக சண்டையிட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அப்போது பிரிட்டிஷ்காரர்களை குறிவைத்து அதன் பிடியில் இருந்த இந்தியாவிலும் தாக்குதல் நடத்த ஜெர்மனி திட்டமிட்டது. அதற்காக 1914ம் ஆண்டு செப்டெம்பர் 22ம் தேதி இரவு ஜெர்மனியின் எம்டன் கப்பல் சென்னையில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதை கடைசி நேரத்தில் அறிந்த ஆங்கிலேயர்கள் உடனடியாக சென்னையை இருளில் மூழ்கச் செய்தனர். ஆனால் கலங்கரை விளக்கமாக செயல்பட்ட சென்னை உயர்நீதிமன்ற கோபுரத்தின் மீது இருந்த விளக்கை அணைக்க ஆங்கிலேயர்கள் மறந்துவிட்டனர்.

கலங்கரை விளக்கை இலக்காகக் கொண்டு சென்னையில் குண்டு மழை பொழிந்தது எம்டன் கப்பல். இதில் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும் சென்னை துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ்காரர்களுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்குகள் வெடித்துச் சிதறின. எம்டன் கப்பல் வீசிய குண்டு உயர்நீதிமன்றத்தில் விழுந்து வெடித்துச் சிதறியதில் அதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சென்னையில் குண்டு மழை பொழிந்தவுடன் பிரிட்டிஷ்காரர்கள் திருப்பித் தாக்குவதற்குள், அங்கிருந்து உடனடியாக தப்பியது எம்டன் கப்பல். இந்த தாக்குதலின் பீதி சென்னை மக்களை சில நாட்கள் ஆட்கொண்டது.

உலகப்போரில் எதிரிகளின் 50க்கும் மேற்பட்ட கப்பல்களை வீழ்த்தி கதாநாயகனாக விளங்கிய எம்டன் கப்பல், அதே ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஆஸ்திரேலிய கப்பலால் சிட்னி துறைமுகம் அருகே கொக்கோஸ் தீவுப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. எம்டன் கப்பல் சென்னையை தாக்கியதில் இருந்து அதன் பெயர் தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. 
எம்டன் வீசிய குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டு வரலாற்றை பேசும் சின்னமாக தற்போது எழும்பூர் அருங்காட்சியத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close