[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனருக்கு கத்திக்குத்து

namakkal-knife-bunch-conductor

நாமக்கல் அருகே அரசுப் பேருந்தில் பயண சீட்டு கேட்ட நடத்துனரை கத்தியால் குத்தியவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்துாரில் இருந்து நாமக்கல் மாவட்டம், மோகனுார் வழியாக பரமத்திவேலூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து பேட்டப்பாளையம் அருகே வந்தபோது, அன்பழகன் என்ற பயணி ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்றதும் பேருந்து நிறுத்தத்தில் அவர் இறங்கியபோது அன்பழகனிடம் நடத்துனர் கணேசன் டிக்கெட் கேட்டுள்ளார். டிக்கெட் எடுக்காத அன்பழகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தன்னிடம் இருந்த கத்தியால் நடத்துனரை குத்தியுள்ளார். இதில் காயம்பட்ட நடத்துனரை பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். மேலும் கத்திக்குத்தில் ஈடுபட்ட அன்பழகனையும் மடக்கிப்பிடித்து அடித்தனர். இதில் காயம்பட்ட அன்பழகனும் மருத்துவமனைக்கு‌கொண்டு செல்லப்பட்டார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close