[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்
 • BREAKING-NEWS நாட்டில் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.90,669 கோடி: மத்திய அரசு அதிகாரிகள்
 • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார்: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமனம்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரும் அமைதி காக்க வேண்டும்: மைத்ரேயன் எம்.பி
 • BREAKING-NEWS கமலை பாஜகவில் இணைக்கலாமா என்பதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: எஸ்.வி.சேகர்
 • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
 • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
 • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
 • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
 • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
 • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
தமிழ்நாடு 16 Sep, 2017 09:21 AM

விளைவுகள் தெரியாமல் விமர்சிக்கிறார்கள்: நீதிபதி கிருபாகரன்

justice-kirubakaran-warning

விளைவுகள் தெரியாமல் நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரித்துள்ளார்.

ஆசிரியர்கள் போராட்டம் குறித்த வழக்கில் கடுமையாக சாடிய நீதிபதி கிருபாகரன், ரூ.40, 50 ஆயிரம் ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதா என்று கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆசிரியர் போராட்டங்கள் குறித்து நீதிபதி கிருபாகரன் முன்வைத்திருந்த கேள்விகளுக்கும், உத்தரவுகளுக்கும் எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்‌கள் வந்துள்ளதாகவும், விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சங்கரன், சூர்யபிரகாசம் ஆகியோர் முறையிட்டிருந்தனர். இதனை எதிர்த்து வாதம் செய்த அரசு சிறப்பு வழக்கறிஞர் ராஜகோபாலன், ஆதாரம் இ‌ல்லாமல் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுவதாக தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன், எந்த உத்தரவு அளித்தாலும் அதை விமர்‌சிக்கிறார்கள் என்றார்.

குழு விவாதங்களில் பேசுவோர் கூட நீதிமன்ற உத்தரவை புரிந்துகொள்ளாமல் பேசுவதாகவும், விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைக்கூட அறியாமல் சிலர் விமர்சிப்பதாகவும் எச்சரித்தார். ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தபோது, அதை விமர்சித்து தனக்கு பல கடிதங்கள் வந்தன என்றும், அதில் 80 சதவிகிதம் எதிர்மறை விமர்சனமாகவே இருந்தன என்றும் கூறினார். இதுவரை தாய், தந்தை மற்றும் ஆசிரியர்களிடம் திட்டுவாங்காத சொற்களில் தான் வசைப்பாடப்பட்டதாகவும் வேதனை தெரிவித்தார். வண்டி ஓட்டத் தெரியுமா? மனைவியோடு குண்டும் குழியுமான சாலையில் சென்றிருக்கிறாயா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். எனவே தற்போதைய விமர்சனங்கள் குறித்த ஆதாரங்களைத் தாக்கல் செய்யுமாறு கூறிய கிருபாக‌ரன், வழக்கை செப்டம்பர் 18ஆம் தேதி விசாரிப்பதாகவும், அதற்குள் நிறைய விமர்சனங்கள் கிடைக்குமென்றும் குறிப்பிட்டார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close