[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
தமிழ்நாடு 15 Sep, 2017 10:25 PM

பாலியல் வன்கொடுமை செய்த போலீஸார்: கிணற்றில் போடப்பட்ட கல்லாய் வழக்கு

4-tribe-women-sexually-harassed-by-police-in-tamilnadu-case

விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாரால் நான்கு பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் ஆறு ஆண்டுகள் ஆன பிறகும் விசாரணையே தொடங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் பகுதியைச் சேர்ந்த இருளர்‌ சமூகத்தைச் சேர்ந்த தம்பதியரின் இரு மகள்கள் மற்றும் இரு மருமகள்களை திருக்கோவிலூர் ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகரன், காவலர்கள் பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகிய 5 போலீசாரும் கடந்த 2011 ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக 5 போலீசார் மீதும் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலா 5 லட்சம் வீதம் 20 லட்சம் நிவாரணம் வழங்கினார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் சீனுவாசன், உதவி ஆய்வாளர் ராமநாதன் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழிகாட்டுதல் உத்தரவை பெற்று, விழுப்புரம் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுள்ளனர். பாலியல் குற்றம் நடந்து 6 ஆண்டுகளாகியும் மாநில அரசும் வழக்கு விசாரணையை தொடங்கவில்லை. உயர்நீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close