[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

20 தேதிவரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் தடை

madras-high-court-order

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த 20 தேதிவரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும் ஆகவே அவரது தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதனை விசாரணைக்கு ஏற்று கொண்டது சென்னை உயர்நீதிமன்றம்.

இதனிடையே தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருடன் ‌சபாநாயகரை சந்தித்து ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தனர். சட்டப் பேரவை தலைவர் அனுமதி இன்றி ஆளுநரை சந்தித்ததற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் சட்டப்பேரவை தலைவர். அந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவும், மு.க.ஸ்டாலின் மனுவும் இன்று ஒருசேர விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க உள்ளனர் என ஆராய்ந்து பதிலளிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞரைக் கேட்டிருந்தது. இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, எடுக்கப்படாதா என பேரவையால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும், எப்போது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், என்ன நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பேரவைத் தலைவரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறினார்.

பேரவைத் தலைவர் அளித்த நோட்டீஸுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதில் அளிக்க வேண்டுமே தவிர, அதைவிட்டுவிட்டு முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடி இருப்பது தவறான அனுகுமுறை என்றும் கூறினார். கூடவே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்குடன் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலை இணைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் வாதிட்டார். 

அப்போது முக.ஸ்டா‌லின் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த 28 நாள்களாக மைனாரிட்டி அரசு தமிழகத்தில் நடந்து வருகிறது எனக் குறிப்பிட்டதோடு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு என்றும், ஆனால் ஆளுநர் தனது கடமையை செய்‌யத் தவறியதால் நீதிமன்றத்தை நாங்கள் நாட வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டார். 

வெற்றிவேல் எம்எல்ஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தற்போது ஒரு எம்எல்ஏ மட்டும் சென்னையில் இருப்பதாகவும் மீதமுள்ள மற்ற எம்.எல்.ஏக்களும் அதே மனநிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், இவ்வழக்குகள் தொட‌ர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டுமெனக் கோரினார். அப்போது கபில் சிபல், வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் விசாரணைக்கு வரும் வரை பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என உத்தரவிடுமாறு  கோரிக்கை விடுத்தார். இதையேற்ற நீதிபதி துரைசாமி, வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அதுவரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த தடை‌விதித்தார். மேலும், தலைமைச் செயலாளர், பேரவைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர் ஆகியோர் விளக்களிக்கவும் உத்தரவிட்டார்.

 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close