[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

போதிய மருத்துவர்கள், செவிலியர் இல்லாததால் அவதிப்படும் நோயாளிகள்

enough-doctors-patients-suffering-from-a-nurse

சேலம் மாவட்டம்‌ மேட்டூரிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், செவிலியரும் இல்லாததால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வரும் நிலையில், பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைக்கே சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால், மேட்டூர் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால், ஒரே படுக்கையில் 2 நோயாளிகளை அனுமதிக்கும் நிலை உள்ளது.

பல உள்நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், போதிய மருத்துவர்கள் இல்லை எனப் புகார் எழுந்திருக்கிறது. ஒரு வார்டுக்கு 4 செவிலியர்கள் தேவை என்ற நிலையில், 2 வார்டுகளுக்கு ஒரு செவிலியர் மட்டுமே இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பணிச்சுமை‌ காரணமாக செவிலியர்கள் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close