[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை
  • BREAKING-NEWS விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பாலி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 28 பேர் காயம்

மன்னார்குடி அதிமுக அலுவலகத்துக்கு தீ வைப்பு

fire-at-admk-office

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலுள்ள அதிமுக அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதிமுக அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், முன்பக்கம் இருந்த கீற்றுக் கொட்டகையில் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். அதிமுக அலுவலகத்திற்கு அருகிலுள்ள இந்திய வங்கியின் சிசிடிவி கேமராவை துணியால் மறைத்துவிட்டு பின்னர் அலுவலகத்திற்கு தீ வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், வங்கி அதிகாரிகள், சிசிடிவி காட்சியைக் கொடுத்த பின்புதான் தீ வைத்தது யார் என்று தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close