[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் எம்.சி.சம்பத்
 • BREAKING-NEWS தமிழ்நாடு 2ஆவது சுகாதார திட்டத்துக்கு உலக வங்கி ரூ.2600 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS வளர்ச்சித் திட்டங்களில் ஆளுநர் கவனம் செலுத்துவதை எப்படி தவறு என்று கூறமுடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்
 • BREAKING-NEWS சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS இடைக்கால தடைவிதிக்கப்பட்ட 742 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடையில்லை- உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு ஆளும்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு
 • BREAKING-NEWS தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
 • BREAKING-NEWS சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 387 குடிசை வீடுகள் அகற்றம்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,757 கன அடியில் இருந்து 1,711 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.16, சென்னையில் முட்டை விலை ரூ.5.65 ஆக நிர்ணயம்
 • BREAKING-NEWS புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஏஓ பலி
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பஞ்செட்டி பகுதியில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு
தமிழ்நாடு 12 Sep, 2017 09:34 AM

நவோதயா பள்ளிகள் என்றால் என்ன?

navodya-school-in-tamilnadu

மாநில அரசு நிலம் மட்டும் ஒதுக்க, மத்திய அரசு நிதியில் கட்டப்படும் பள்ளிகளே நவோதயா பள்ளிகள் ஆகும்.

கிராமப்புற மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் நோக்கத்தோடு நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா உண்டுஉறைவிடப் பள்ளி தொடங்கவேண்டும் என்று கடந்த 1986 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. இந்தப் பள்ளிகளை தொடங்க மாநில அரசுகள் நிலம் மட்டும் கொடுத்தாலே, ஒவ்வொரு பள்ளியை கட்டவும் மத்திய அரசு 20 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறது.

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கப்படுகின்றனர். இதில் 75 சதவீத இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதுடன், மூன்றில் ஒரு பங்கு மாணவிகளுக்கும் ஒதுக்கப்படுகின்றன. இங்கு 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் பயிலும் வாய்ப்பு இருந்தாலும், அதற்கு பிறகு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்கும் என்பதே தமிழக அரசு இந்த பள்ளிகளை எதிர்க்கக் காரணமாக இருந்திருக்கிறது. இதில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுவதுடன், பன்முக பயிற்சியும் அளிக்கப்படு‌ம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
Related Tags : NavodyaSchoolTamilnadu
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close