[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

தென்மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை

widespread-rains-across-southern-districts

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ள சூழலில், தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. விருதுநகரில் சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

மாலை நேரத்தில் லேசான காற்றுடன் பெய்த இந்த மழையால் வெப‌பம் தணிந்து சற்று குளிர்ச்சி நிலவியது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியிலும், நெல்லை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

தேனி மாவட்டத்தில‌ இரவில் பரவலாக மழை பெய்தது. இதேபோன்று, கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்கள், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்திருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close