[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன
  • BREAKING-NEWS பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்
  • BREAKING-NEWS சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன
  • BREAKING-NEWS பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
  • BREAKING-NEWS போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்
  • BREAKING-NEWS வனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

நவோதயா பள்ளிகளை தொடங்க கோர்ட் அனுமதி!

court-permit-to-open-navodhaya-schools

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று அனுமதி அளித்துள்ளது.

குமரி மகா சபை செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்கும் நோக்கில் மத்திய அரசால் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அந்தப் பள்ளிகளை தொடங்க மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. எனவே தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில், ’தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் எஸ்.எஸ்.எல்.சி. வரை தமிழ் கற்பிக்கப்படும் என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக கொள்கை முடிவுகள் எடுப்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை  ஒத்திவைத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதி அளித்தும் பள்ளி தொடங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது பற்றி முடிவெடுக்க தமிழக அரசுக்கு 8 வார கால அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close