[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கிடையாது: வேலூர் சிஎம்சி அதிரடி அறிவிப்பு

there-is-no-student-admission-based-on-neet-vellore-cmc-action-notification

நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாது என வேலூர் சிஎம்சி எனப்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதன்படி, எம்.பி.பி.எஸ் படிப்பில் உள்ள 99 இடங்கள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிலுள்ள 61 இடங்களுக்கு நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசு பரிந்துரையின்கீழ், வீர மரணம் அடைந்த வீரர் ஒருவரது மகனுக்கு மட்டும் எம்பிபிஎஸ் வகுப்புகள் நடத்தப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.

தங்களது மருத்துவக் கல்லூரியில் பயிலும் சிறுபான்மை மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்காக செயல்படும் மருத்துவமனைகளில் 2 ஆண்டுகளுக்கு பணியாற்றுவது கட்டாயம் என்ற விதி இருப்பதாக கூறியுள்ள சிஎம்சி நிர்வாகம், தற்போதைய மாணவர் சேர்க்கை முறைப்படி அத்தகைய மாணவர்களை தேர்வு செய்ய இயலாது என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என கூறியுள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகம், வெறும் நீட் மதிப்பெண் முறையில் அத்தகைய மாணவர்களை கண்டறிவது சாத்தியமல்ல என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் அடுத்த மாதம் விசாரணை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-இல் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 85 இடங்களில் சிறுபான்மைப் பிரிவு மாணவர்களும் மீதமுள்ள 15 இடங்களில் பிற பிரிவு மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவது வழக்கம்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close