[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

சிறையில் கைதிகள் மரணம்: விரிவான பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

madras-hc-ordered-tn-govt-to-submit-details-report-on-prisoner-s-death

சிறையில் கைதிகள் மரணம் தொடர்பாக விரிவான பதில் அளிக்குமாறு தமிழ‌க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் கேசவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில்,2012-ம் ஆண்டில் 62 பேரும், 2013-ஆம் ஆண்டில் 75 பேரும் சிறையில் மரணமடைந்ததாக கூறப்பட்டிருந்தது. 109 கைதிகளின் மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைக்காக காத்திருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கைதிகள் மரணத்தின்போது நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிகளும், குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதிகளும் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைக்காக நான்கு ஆண்டுகளாக காத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பியது.

உள்துறை கூடுதல் செயலாளர் உரிய நடவடிக்கை எடுத்து அதுதொடர்பான விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close