[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: எரிவாயு கசிவால் பொதுமக்கள் பீதி

ongc-pipeline-leak-at-mathirimangalam

நாகை மாவட்டம் மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து எரிவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. நான்காவது முறையாக எரிவாயு கசிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி ஓ.என்.ஜி.சி. எண்ணை குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து ஏற்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.  பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாதிரிமங்கலம் வழியாக செல்லும் ஓ.என்.ஜி.சி.குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்தக் குழாயில் 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close