[X] Close
JUST IN
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
தமிழ்நாடு 09 Aug, 2017 09:04 PM

ஓ.பி.எஸ் கிணறு விவகாரம்: நிலத்தையும் கேட்கும் கிராம மக்கள்

village-people-asking-ops-land-also-along-with-his-well

கிராமத்திற்கு கிணற்றையும் போர்வெல்லையும் தானமாக தருவதாக ஓ.பி.எஸ் உத்தரவாதம் கொடுத்த நிலையில், கிணறு மற்றும் போர்வெல் அமைந்துள்ள 2 ஏக்கர் 31 சென்ட் நிலத்தையும் கேட்டு கிராம மக்கள் கோரிக்கை வைத்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் கிராமக் குடிநீர் கிணறு அருகே முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் ராட்சதக் கிணறு வெட்டியதால் கிராமத்தின் குடிநீர் கிணற்றில் நீர் வற்றியதாகக் கூறி கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கிராமப் போரட்டக் குழுவினரிடம் பெரியகுளம் டி.எஸ்.பி மற்றும் மத்தியஸ்தர்கள் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் கிணறு மற்றும் போர்வெல்லை கிராமத்திற்கு தானமாக தருவதாக ஓ.பி.எஸ் கூறினார். ஆனால் கிராம மக்கள் கிணறு, போர்வெல் அமைந்துள்ள 2 ஏக்கர் 31 சென்ட் நிலத்தையும் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கை குறித்து ஓ.பி.எஸ்-ஸிடம் தெரிவித்துவிட்டு 5 நாட்களில் முடிவை தெரிவிப்பதாக மத்தியஸ்தர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தை 2 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர். ஓ.பி.எஸ் தரப்பினர் கூறுகையில் 5 நாட்களுக்குள் கிணறு பிரச்னை தீர்க்கப்படும் எனவும் இதனால் கிராம மக்களின் போராட்டம் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close