[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

விடாத‌ கிணறு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்டித்து மனித சங்கிலி

periyakulam-people-protesting-against-ops

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்டித்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீர் பிரச்னை நிலவும் லட்சுமிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றை மக்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரி அண்மைக்காலமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்‌. இந்நிலையில், கிணற்றை கிராம மக்களுக்கே விலைக்கு தருவதாகக் கூறி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதற்கு முன்பே வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதால் லட்சுமிபுரம் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கிணற்றை தானமாக தருவதாக மீண்டும் உறுதி அளித்த நிலையில் கிணற்றை மக்களுக்கு தராததைக் கண்டித்து கடந்த இருநாட்களாக அங்கு தொடர் போராட்டம் நடந்துவருகிறது. இன்று நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close