[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு 08 Aug, 2017 10:10 AM

என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி 

nlc-talks-about-dismissed-employee-failed-as-officers-didnt-accept-the-request

போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடியாது என நிர்வாகம் தெரிவித்ததால் புதுச்சேரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரியக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக குறைத்தது தொடர்பாக ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே வழங்கி வந்தபடி பணி நாட்கள் வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அந்தோணி, பூவராகவன், சங்கர் ஆகிய 3 தொழிலாளர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது, இதனை தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கங்களும் நீக்கம் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களுக்கு பணியினை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் உள்ள உதவி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றம் என்.எல்.சி நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் போது பணி நீக்கம் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க என்.எல்.சி நிர்வாகத்திற்கு உதவி தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தினார். மேலும் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினருக்கு உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து 3 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில இருப்பதால் அவர்களை பணியில் சேர்க்க முடியாது என என்.எல்.சி நிர்வாகம் கூறியதால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து நெய்வேலியில் கூடி முடிவெடுக்கப்படும் என தொழற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close