[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி படப்பிடிப்பு பகுதியில் ஆர்ப்பாட்ட‌ம்

protest-for-ban-bigg-boss

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பினர் திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சி படபிடிப்பு நடைபெறும் ஈ.வி.பி பிலீம் சிட்டி நுழைவாயில் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம், ஈ.வி.பி பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகராஜன் தலைமையில் ஈ.வி.பி பிலிம் சிட்டி நுழைவாயிலின் முன்பு 40க்கும் மேற்பட்டோர் திரண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நசரத்பேட்டை போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகைகள் அரை, குறை ஆடைகளுடன் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து கொண்டு திரிகிறார்கள். எவ்வளவோ பிரச்சினை இருக்கையில் அதனை திசை திருப்ப இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த வாரத்திற்குள் இந்த நிகழ்ச்சியை தடை செய்யவில்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் தொடரும்" என தெரிவித்தனர்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close