[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

சமூக வலைத்தளத்தில் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு: 4 பேரிடம் விசாரணை

nia-investigate-4-people-in-coimbatore-for-is

கோவையில் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டியதாக நான்கு பேரிடம் தேசிய புலனாய்வு முகமையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

கோவையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு திரட்டியதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சதான் உசேன், சனாபர் அலி ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் காட்டூர் காவல் நிலையத்தில் வாசிம்கான், ரகுமான் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமையினரின் தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி நான்கு பேருக்கும் சம்மன் வழங்கினர். 

இவர்கள் நான்கு பேரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாள்களுக்கு முன் இதேபோல மேலும் இருவரிடம் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவர்களுக்கும் சம்மன் வழங்கியிருந்தனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close