[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முத்தரசன்
  • BREAKING-NEWS உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
  • BREAKING-NEWS வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
  • BREAKING-NEWS தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
  • BREAKING-NEWS அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியும்: எம்எல்ஏ ஆறுகுட்டி
  • BREAKING-NEWS தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை
  • BREAKING-NEWS புதிய ரூ.200 நோட்டை அறிமுகப்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம்: அமைச்சர் பெஞ்சமின்
  • BREAKING-NEWS என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்பேன்: தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ
  • BREAKING-NEWS மருத்துவப் படிப்பு- தரவரிசைப் பட்டியல் வெளியீடு
  • BREAKING-NEWS நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு காங். எம்எல்ஏக்கள் கடிதம்
  • BREAKING-NEWS மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு 05 Aug, 2017 08:35 AM

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு முறை விரிவாக்கம்

govt-to-implement-electronic-ticking-in-all-chennai-bus

சென்னையில் அனைத்து மாநகர பஸ்களிலும் டிக்கெட் வழங்குவதற்காக 20-ந் தேதியில் இருந்து மின்னணு பயணச் சீட்டு வழங்கும் கருவி பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

"தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரின் ஆணைப்படி, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்குமான மின்னணு பயணச்சீட்டு கருவிகளின் பயன்பாடு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது, மின்னணு பயணச்சீட்டு திட்டம் செயல்படுத்தும் நிறுவனங்களான அனலாஜிக்ஸ்டெக் இந்திய நிறுவனம் மற்றும் இன்ஜெனரி டெக்னாலஜிஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை சார்ந்த அலுவலர்கள், மின்னணு பயணச்சீட்டுத் திட்டம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தினர். 

தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னணு பயணச்சீட்டு கருவிகளை முழுவீச்சில் விரிவாக்கம் செய்து, வரும் 20-ந் தேதி முதல் மாநகர் போக்குவரத்துக்கழகம், சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டை முழு அளவில் பயணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நடத்துனர்கள் பயணச்சீட்டு வழங்குவதிலும், பயணிகள் பயணச்சீட்டுகளை பெறுவதிலும் உள்ள நடைமுறை எளிதாகும்." எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close