[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

டெங்குவால் மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு

dengue-is-also-a-minor-girl-s-death

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு மேலும் ஒரு பள்ளி மாணவி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் ஸ்ரீவித்யா. 4 ஆம் வகுப்பு மாணவியான இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சல் வந்ததால், காடையாம்பட்டி அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.

டெங்கு உறுதி செய்யப்பட்டதால் ஓமலூர் மருத்துவமனையிலும், பின்னர் சேலம் மருத்துவமனையிலும் ஸ்ரீவித்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஸ்ரீவித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். அதனையடுத்து காடையாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் சாது பகத்சிங் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ‌இதே பகுதியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த வாரம் டெங்குவால் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு சிறுமி உயிரிழந்தார். சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்த அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close