[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மோசடி செய்து கொளையடித்து வந்த கும்பல் கைது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே பகுதிக்கு குடியரசுத் தலைவர் நாளை செல்கிறார்
  • BREAKING-NEWS இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது: எம்.பி.வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு
  • BREAKING-NEWS கோலியுடன் மரம் நடும் அனுஷ்கா
  • BREAKING-NEWS அதிமுக எனும் பேருந்தை முதல்வர் சரியாக ஓட்டிச் செல்கிறார்: எம்எல்ஏ முருகுமாறன்
  • BREAKING-NEWS பேரம் படிந்துவிட்டதால் இரு அணிகளும் இணைகிறது: எம்எல்ஏ வெற்றிவேல்
  • BREAKING-NEWS பதவி, பேரம் படியாததால் அணிகள் இணைப்பில் தாமதம்: புகழேந்தி
  • BREAKING-NEWS 99 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் சூரிய கிரகணத்தால் பாதிப்பா..?
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: திருநாவுக்கரசர்
தமிழ்நாடு 03 Aug, 2017 05:16 PM

வறண்டு போன காவிரி....களையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

dried-cauvery-adi-perruku-celebration

வறண்டு போன காவிரியால் ‌திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆடிப் பெருக்கு விழா இன்று களையிழந்து காணப்பட்டது.

ஆடிமாதத்தில் ஆறுகளில் புதுவெள்ளம் பாயும் என்பதால், ஆடிப்பெருக்கை தமிழக மக்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வறண்டு போன காவிரியால் இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று களையிழந்து காணப்பட்டது.

திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாட வந்த பொதுமக்கள் காவிரியில் தண்ணீர் இல்லாததால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். எனினும் குழாய்கள் மூலம் தண்ணீர் பிடித்து ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாடினர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் குறைந்த அளவு ஓடிய காவிரி நீரில் ஏராளமானோர் புனித நீராடினர். பின்னர் கரையோரத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். எனினும் இந்த ஆண்டு குறைந்த அளவே பக்தர்கள் கூட்டம் வந்ததால், அப்பகுதி களையிழந்து காணப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் வராததால் கமலாலய குளத்தில் பெண்கள் வழிபாடு நடத்தினர். ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் குளம் குட்டைகளில் தேங்கியிருந்த தண்ணீரில் ஆடிப்பெருக்கினை மக்கள் கொண்டாடினர். ஆறுகளில் தண்ணீர் இல்லாமல் போனதால் விழா களையிழந்து காணப்பட்டது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close