[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

உயிரிழந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா குடும்பத்தினர் கருணாநிதியுடன் சந்திப்பு: சிபிஐ விசாரணைக்கு உதவ கோரிக்கை

dsp-vishnupriya-family-meets-dmk-chief-karunanidhi-at-chennai

உயிரிழந்த திருச்செங்கோடு டி‌.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் குடும்பத்தினர் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும், விஷ்ணுபிரியா எழுதியதாக கூறப்படும் கடிதம் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என அவர்கள் கூறியதாக தெரிகிறது. பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை மேற்கொண்டுவந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் உடல் சில மாதங்களுக்கு முன் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close