[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

‘20 ஆண்டுகளாக வீடு இல்லை’: அடையாளம் இல்லாமல் தவிக்கும் நரிக்குறவர்கள்

narikuravar-community-people-struggling-over-20-years-without-home

தூத்துக்குடியில் தங்குவதற்கு வீடின்றி கடந்த 20 ஆண்டுகளாக நரிக்குறவர் இன மக்கள் தவித்து வருகின்றனர். நீண்ட காலமாக தூத்துக்குடியில் வசிக்கும் தங்களுக்கு அடையாளச் சான்றுடன் வீடு கட்டித் தர வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்த நரிக்குறவர்கள் கடைசியாக புதிய பேருந்து நிலையம் அருகே ஒதுக்கப்பட்டுள்ளனர். இங்கே தற்காலிகக் கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் இந்த மக்கள், மழைக் காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அரசு அடையாள அட்டைகள் இல்லாததால், கல்வி, ரேஷன் பொருட்கள் என அனைத்தும் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த நிலை மாற, அரசு தங்களுக்கு சொந்த வீடு கட்டித் தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற அடையாளச் சான்று அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

நரிக்குறவர்களுக்காக வசவபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு மனைகளை வழங்கிய அரசு, பசுமை வீடுகள் அல்லது இந்திராகாந்தி நினைவு திட்டத்தின்கீழ் குடியிருப்புகள் வழங்கப்படுமென உறுதியளித்தது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படாததால், இவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர். நரிக்குறவர்களின் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷிடம் கேட்டபோது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close