குடியரசுத்தலைவர் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கேரள எம்.எல்.ஏ பாரக்கல் அப்துல்லா சென்னையில் வாக்களித்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குட்டியாடி தொகுதி எம்.எல்.ஏ பாரக்கல் அப்துல்லா, உடல்நலக்குறைவால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னையில் தங்கி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் சென்னையில் வாக்களிப்பதற்காக அவர் முன்கூட்டியே சிறப்பு அனுமதி பெற்றிருந்ததால் அதனடிப்படையில் இன்று வாக்களித்தார். சட்டப்பேரவைக்கு வந்த அப்துல்லாவை திமுக எம்.எல்.ஏக்கள் சேகர்பாபு, எஸ்.ஆர். ராஜா உள்ளிட்டோர் உடல் நலம் விசாரித்தனர்.
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்