[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு
 • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேசம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவு
 • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 294 ரன்கள் இலக்கு
 • BREAKING-NEWS வேளாண்மை துறையில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: ஆர்பிஐ செயல் இயக்குநர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்தை தீர்த்து வைப்பது தமிழக அரசின் கடமை: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS கமல் புத்தி கூர்மை கொண்டவர், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு மாற்றத்தை தருவார்: நடிகர் பிரசன்னா
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
 • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகுதான் என்ன என்பது தெரியும்: சரத்குமார்
 • BREAKING-NEWS டி20 உலகக் கோப்பையை வென்ற நாள் இன்று!
 • BREAKING-NEWS பரோல் நீட்டிப்பிற்கான அரசாணை பேரறிவாளனிடம் வழங்கப்பட்டது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்த ஆழமான சந்தேகத்தை நிரூபணமாக்கியுள்ளனர்: ஜெ.தீபா
 • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பதே தமிழக அரசின் கோரிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS பெட்ரோல், டீசல் விலை இனி குறையும்: அமைச்சர் தகவல்
தமிழ்நாடு 17 Jul, 2017 05:42 PM

சிவாஜி சிலையை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கலாம்: உயர்நீதிமன்றம்

shivaji-statue-can-be-removed-and-put-in-hiatus-high-court

சிவாஜி சிலையை கடற்கரை சாலையிலிருந்து அகற்றி மணிமண்டபத்தில் வைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மெரினா சிவாஜி சிலை தொடர்பாக சிவாஜி சமூக நலப்பேரவை தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி சிலை மெரினா சாலையோரத்தில் நிறுவப்‌பட்டால் அனைவரும் பார்க்கும் வகையிலும், அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சிவாஜியை கவுரவித்த‌ நிலையில், அவர் பிறந்த தமிழகத்தில் அவருக்கு மரியாதை மறுக்கப்படுகிறது என்று  என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. தமிழகத்தில் சாலையோரங்களில் 13 ஆயிரம் சிலைகள் இருப்பதாக அரசே தெரிவித்த நிலையில், சிவாஜி சிலையை ஏன் மெரினாவில் நிறுவக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அனைத்து சிலைகளையும் மெரினா‌வில் நிறுவினால், மெரினாவிற்குள் நுழையக்கூட முடியாது. சிலைகளை நிறுவுவது, அகற்றுவது போன்றவற்றைவிட மக்களின் பாதுகாப்பே முக்கியமானது. எனவே அரசு ‌எடுத்த முடிவின்படி காமராசர் சாலையின் நடுவே உள்ள சிவாஜி சிலையை அகற்றி அடையாறில் கட்டப்படும் மணிமண்டபத்தில் நிறுவலாம். அதேநேரம், சிவாஜியின் நி‌னைவு நாளான ஜூலை 21ஆம் தேதி ‌மட்டும் சிலையை அகற்றும் பணியில் ஈடுபடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close