[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கமலுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும்.... அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar-tell-about-kamal-hassan

கமலஹாசனுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலுக்கு வந்தபின் கருத்து சொல்லட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது என்பது போன்று அரசுக்கு எதிரான பல கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமலஹாசனுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தியாகிகள் நினைவு தினத்தையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள தியாகிககளுக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு மீது ஆதாரமின்றி கமலஹாசன் சேற்றை வாரி இறைப்பதாக குற்றம் சாட்டினார். கமல் கூறும் கருத்துக்களுக்கு அமைச்சர்கள் பதில் மட்டுமே அளிக்கின்றனர் எனக்கூறிய அவர், கமல்ஹாசனுக்கு ஆதரவளிக்கும் கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஜெயலலிதா இருக்கும்போது இதுபோன்ற கருத்துக்களை கமல் கூறவில்லை. கமலுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார் 


 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close