எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் இன்று அதிகாலை இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தற்போது கைது செய்யப்பட்ட 4 பேர் உள்பட 81 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இதுவரை 159 படகுகளை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்