தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசன் மீது தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே, நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டிவிட்டர் பக்கத்தில் அவர், அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி எனவும், நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார். என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் தெரிவதாகவும் கூறியுள்ள கமல்ஹாசன், ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கிறான், அதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்