[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

எவ்வளவு வரி கட்டினீங்கனு ஆய்வு செய்யட்டுமா - கமலுக்கு அமைச்சர் மறைமுக மிரட்டல்?

minister-tell-about-kamal-hassan

கமல்ஹாசன், தான் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை அவர் விளக்குவாரா? அல்லது ஆய்வு செய்யட்டுமா? என அமைச்சர் வேலுமணி நடிகர் கமலஹாசனை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து, அண்மையில் நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாகப் பொதுவாகப் புகார் கூறக் கூடாது. எந்தத் துறையில் ஊழல் இருக்கிறது என்று நடிகர் கமல் குறிப்பிட்டுக் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இதனிடையே, கமல்ஹாசனிடம், ஜெயக்குமாரின் பதிலைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த கமல், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக தெரிவித்தார்.

கமலஹாசனின் பதிலால் கோபமடைந்த அமைச்சர் வேலுமணி, "நடிகர் கமலஹாசன் இப்போது தான் தமிழகத்தில் இருக்கிறாரா? இதற்கு முன்பெல்லாம் எங்கே சென்றார். முன்பெல்லாம் அவர் இவ்வாறு பேசுவது கிடையாது.  ஆனால் சமீப காலமாக ஆதாரம் இல்லாமல் பேசி வருகிறார். ஊழல் குறித்து அவர் நிரூபிக்க தயாரா? ஆதாரம் இருக்கிறதா?  ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசக்கூடாது. எனவே அ.தி.மு.க. அரசை குறை கூறுவதை கமலஹாசன் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. கமலஹாசன் இனியாவது விபரங்கள் தெரிந்து கொண்டு பேசவேண்டும். மேலும் கமலஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை அவர் விளக்குவாரா? அல்லது அதுகுறித்து ஆய்வு செய்யட்டுமா?" என அவர் கூறினார். இதனிடையே சேரியில் கமலும், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு நாள் தங்கி பார்த்தால் அவர்களின் உண்மையான நற்பண்புகள் தெரியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close