[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

central-govt-should-intervene-to-finish-tn-fishermen-issue-urges-karuna

தமிழக மீனவர் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணுமாறு மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி ‌வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனைக் காலம்தான் இலங்கைக் கடற்படையினரைக் கண்டு தமிழக மீனவர்கள் அஞ்சியபடி வாழ வேண்டுமோ என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதும், தாக்குவதும் தொடர்கதையாகி வருவதாக கூறியுள்ள கருணாநிதி, மீனவர் கைது செய்யப்படும்போதெல்லாம் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதிவிட்டு செய்தி வெளியிட்டு விடுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

கடிதம் எழுதினால் போதுமா, முதலமைச்சரோ அமைச்சர்களோ டெல்லி சென்று நேரில் முறையிட வேண்டாமா என்றும் அவர் ‌வினவியுள்ளார். எனவே, இனியும் தாமதிக்காமல் மீனவர்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close