[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

தஞ்சை வங்கிக்குப் பூட்டுப் போட்டு விவசாயிகள் போராட்டம்

farmers-stages-lock-down-bank-protest-in-tanjore

தஞ்சையில் விவசாயி பாலன் தாக்கப்பட்டதை கண்டித்து, கோடக் மகேந்திரா வங்கிக்கு பூட்டு போட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கோடாக் மகேந்திரா வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள், பூட்டுப் போட்டும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். தாக்கப்பட்ட விவசாயி பாலனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கடந்த 4ஆம் தேதி விவசாயியை தாக்கிய வங்கி ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close