[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால் மின்சார வாரியத்திற்கு இழப்பு: கருணாநிதி குற்றச்சாட்டு

94000crore-loss-to-tn-electricity-board-karunanidhi-alleged

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதாக, தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்திகளை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கச்சா எண்ணெய்யை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று, யூனிட் 4 ரூபாய் 27 காசுகளுக்கு மின்சாரம் வழங்க முன்வந்தும், யூனிட் ஒன்று 5 ரூபாய் 05 காசுகள் என்கிற அளவில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால், மின்சார வாரியத்தின் இழப்பு 94,000 கோடி ரூபாயை எட்டிவிட்டதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட உடன்குடி மின்திட்டம், இப்போது வரை தொடங்கப்படவில்லை என்றும் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close