சென்னை மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 54 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
போரூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், மேம்பாலத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். போதிய அளவு நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னரே அப்போதைய திமுக அரசு திட்டத்தை தொடங்கியதாகவும் இதனால் நிலங்களை கையகப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். மவுண்ட் - பூந்தமல்லி, ஆற்காடு, பெங்களூரு சாலைகளை இணைக்கும் போரூர் மேம்பாலம் 480 மீட்டர் நீளமும், 372 மீட்டர் நிளமும் கொண்டது. சில தினங்களுக்கு முன் போரூர் பகுதியில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபோது, வாகன ஓட்டிகளே மேம்பாலத்தை திறந்து பயன்படுத்தினர். பின்னர் மேம்பாலம் அடைக்கப்பட்டு இன்று முறைப்படி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !