[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஒரே ஒரு மாணவிக்காக இயங்கும் ஒரு பள்ளி..!

a-school-running-for-only-one-student

நாகை மாவட்டத்தில் ஒரே ஒரு மாணவிக்காக இயங்கிக்கொண்டிருக்கிறது ஒரு அரசுப்பள்ளி. மாணவர் சேர்க்கைக் குறைவால் விரைவில் மூடுவிழா காணக்கூடிய சூழலில் இந்த பள்ளி இருக்கிறது. 
மகாஸ்ரீக்கு படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். இரண்டாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி உற்சாகத்துடன் புத்தகப்பையை மாட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறாள். ஆனால், அவள் மட்டும்தான் அந்த பள்ளிக்குச் செல்கிறாள். அவளுடன் படிக்கவோ, வீட்டுப்பாடம் பகிரவோ பேசிச் சிரிக்கவோ பள்ளியில் யாருமே இல்லை. இந்த ஒற்றை மாணவிக்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது‌ மயிலாடுதுறை அருகே வடகரை கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி. 
1984ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வடகரை, வாடாகுடி, புளிகண்டமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து, மகாஸ்ரீ மட்டுமே தற்போது படித்து வருகிறாள். இருக்கும் ஒரு ஆசிரியரும் விடுப்பில் சென்றுவிட்டதால், தலைமை ஆசிரியரே பாடம் சொல்லிக்கொடுக்கிறார். இதனால் பள்ளியை மூடிவிடாமல் இங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று  வடகரை மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். 
கடந்த ஆண்டு பயின்ற 15 மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில் சேர்க்கையை ஊக்குவிக்க பேரணி நடத்தியும் பலனில்லாமல் போனது. இதுகுறித்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சீனிவாசனிடம் கேட்டதற்கு, மாணவர் சேர்க்கை குறைவு பற்றி விசாரித்து வருவதாகவும், சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close