[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

பேரக்குழந்தைகளுடன் இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் கண்டுகளித்த ஸ்டாலின்

mk-stalin-watches-india-vs-pakistan-match-with-his-grandchildren

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தனது பேரக்குழந்தைகளுடன் கண்டுகளித்து வருகிறார்.

இதுகுறித்து ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் ஒன்றினைப் பதிவிட்டு, தந்தையர் தினத்தில் பேரக்குழந்தைகளுடன் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே இரு நாடுகள் மட்டுமல்லாது உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியாக இருக்கும். அதுவும் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டி என்பதால், கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உலகம் முழுவதும் இந்த போட்டியைக் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரக்குழந்தைகளுடன் கிரிக்கெட் பார்ப்பது போன்ற புகைப்படத்துடன் கூடிய ஸ்டாலினின் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஸ்டாலினின் பதிவில் நெட்டிசன் ஒருவர், கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ஸ்டாலின் குடும்பத்துடன் கண்டுகளிப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close